குற்ற சம்பவங்களை தடுக்க 'சிசிடிவி' கேமரா உதவும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2020
00:48

பொன்னேரி : குற்ற சம்பவங்களை தடுக்கவும், கண்டுபிடிக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என, எஸ்.பி., அரவிந்தன் தெரிவித்தார்.



மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாக்கம், கொடூர், ஆலாடு, வன்னிப்பாக்கம் ஊராட்சிகளில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாய் செலவில், 56 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.நேற்று, எஸ்.பி., அரவிந்தன், பொன்னேரி எம்.எல்.ஏ., பலராமன் ஆகியோர், கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அதை தொடர்ந்து, எஸ்.பி., அரவிந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கிராமங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால், குற்றங்களை தவிர்க்க, தடுக்க, கண்டுபிடிக்க என, பல்வேறு வகைகளில் காவல் துறைக்கு பயன்படுகிறது.



திருவள்ளூர் மாவட்டத்தில் தான், கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் அதிகளவில் நடைபெறுகின்றன.அனைத்து ஊராட்சி நிர்வாகத்திடமும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தி வருகிறோம். பின் தங்கிய கிராமங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.இதுவரை, 4,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.பொன்னேரி பகுதி சென்னையை ஒட்டி உள்ளதால், இப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். கஞ்சா விற்பனை, மணல் திருட்டு, சாராய விற்பனை உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்பாடுகள் நடந்தால் பொதுமக்கள், 90033 90050 என்ற, 'ஹலோ போலீஸ்' எண்ணில் ரகசிய தகவல் கொடுத்து ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X