மயிலம்: மயிலம் அடுத்த கொணமங்கலம் கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண் உடல் குளத்தில் மிதந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மயிலம் அடுத்த கொணமங்கலம் கிராமத்தில் உள்ள குளத்தில் நேற்று அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது.தகவல் அறிந்துவந்த மயிலம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. இறந்து கிடந்தவர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மட்டும் அணிந்திருந்தார்.இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.