விக்கிரவாண்டி: விழுப்புரத்தில் நெஞ்சுவலியால் இறந்த ஐ.ஜி.,யின் பாதுகாவலர் உடலுக்கு ஐ.ஜி., மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.வடக்கு மண்டல ஐ.ஜி., (பொறுப்பு) சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் பணி ஆய்வு காரணமாக விழுப்புரம் வருகை தந்தார். அவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவு காவலராக பணி புரியும்திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த பாரத், 25; என்பவர் விழுப்புரம் விருந்தினர் மாளிகையில் ஐ.ஜி., யுடன் பாதுகாப்புக்காக தங்கியிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாரத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.அவரது உடல் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மருத்துவமனைக்கு வந்த ஐ.ஜி., சந்தோஷ்குமார், இறந்த பாதுகாவலர் பாரத் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.பின்னர், எஸ் .பி., ராதாகிருஷ்ணன் ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், டி.எஸ்.பி., நல்லசிவம், இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து பாரத் உடல் அவரது சொந்த ஊரான போளூருக்கு கொண்டு செல்லப்பட்டது.