பைக்கில் சென்றவர் வெட்டி கொலை திருவெண்ணெய்நல்லுாரில் பயங்கரம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பைக்கில் சென்றவர் வெட்டி கொலை திருவெண்ணெய்நல்லுாரில் பயங்கரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 நவ
2020
01:18

திருவெண்ணெய்நல்லுார்:திருவெண்ணெய்நல்லுார் அருகே, பைக்கில் சென்றவரை கொன்ற நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.



விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் புண்டாரி நன்னப்பா, 80; இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவிக்கு பிறந்தவர் மூசா, 45; வெளிநாட்டில் உள்ளார்.இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் கலீல், 43; வெளிநாட்டில் பணிபுரிந்த இவர், ஆறு மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.



இருவருக்கும் இடையே விளை நிலம் பாகப்பிரிவினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சில நாட்களாக இருவருக்கும் இடையே, அடிக்கடி மொபைல் போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கலீல் தன் சித்தி அபிநாபி என்பவருடன் நேற்று மதியம், பைக்கில் மடப்பட்டு - திருக்கோவிலுார் பிரதான சாலை வழியாக டி.எடப்பாளையம் சென்றார். டி.எடப்பாளையம் அருகே, மூன்று பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கலீலை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.



திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் படுகாயமடைந்த கலீலை மீட்டு, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் கலீல் இறந்தார். இதுகுறித்து, தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X