திருச்சி:திருச்சி, தொட்டியம் மேலவெளிக்காடு பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி நவீன்குமார், 23.
இவர், நாமக்கல் மாவட்டம் ஆலம்பட்டியை சேர்ந்த தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவி சுஜிபாலா, 17, என்பவரை காதலித்து வந்துள்ளார்.இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சுஜிபாலா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
கடந்த, 28ம் தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து சுஜிபாலா குடும்பத்தினர் கொடுத்த புகார்படி, மோகனுார் போலீசார் காதல் ஜோடியை தேடி வந்தனர். இந்நிலையில், மேலவெளிக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில், காதல் ஜோடி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது நேற்று தெரிந்தது. காட்டுப்புத்துார் போலீசார், விசாரிக்கின்றனர்.