தனியார் செய்தால் ஆக்கிரமிப்பு...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2020
01:56

குடியிருப்புக்கு ஒரு பூங்கா அல்லது விளையாட்டு மைதானம் இருக்க வேண்டுமென்று, 1971ம் ஆண்டிலேயே நகர ஊரமைப்பு விதிகளை உருவாக்கியது அரசு. நகரமயமாக்கல் மெதுவாக நடந்து கொண்டிருந்த காலத்திலேயே, ஒவ்வொரு குடியிருப்பிலும் 10 சதவீத இடத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்குரிய இடமாக வைத்திருக்க வேண்டுமென்று, தொலைநோக்கோடு விதிகள் வகுக்கப்பட்டன.


இப்போது கட்டடங்களும், வெப்பமயமாதலும், வாகனப்பெருக்கமும், காற்று மாசும் அதிகரித்து வரும் நிலையில், இந்த விதிகளை மாற்றி கோடிகளில் அள்ளுகிறார்கள், நகர ஊரமைப்புத்துறைக்குப் பொறுப்பானவர்கள்.இதனால் குடியிருப்புகளில் திறந்தவெளி இடங்களே இல்லாமல் போய் விடுமோ என்கிற அச்சம் உருவாகி வருகிறது.குறிப்பாக, கடந்த ஐந்தாண்டுகளில் நகர ஊரமைப்பு விதிகளில் செய்துள்ள பல மாற்றங்கள், மக்கள் நலனை குழி தோண்டிப் புதைப்பவையாகவே உள்ளன. அதிகபட்சம் 75 சென்ட் பரப்பு வரையிலுமான லே-அவுட்களில், பொது ஒதுக்கீட்டு இடம் ஒதுக்கத் தேவையில்லை என்று, கட்டட விதிகளில் புதிய மாற்றத்தை, கடந்த ஆண்டு கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.அதையும்விட, இரண்டரை ஏக்கர் (10 ஆயிரம் சதுர மீட்டர்) வரையிலுமான லே-அவுட்களில் ரோடு நீங்கலாக, 10 சதவீத இடங்களை தானப்பத்திரமாக உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கலாம் அல்லது அதற்குரிய வழிகாட்டி மதிப்பை அரசுக்குச் செலுத்தலாம் என்றும், ஒரு புதிய விதியை உருவாக்கி, ஒட்டுமொத்தமாக ரிசர்வ் சைட்களுக்கு குழி பறித்துள்ளது, நகர ஊரமைப்புத்துறை.இவை அனைத்துமே குடியிருப்போர் நலனுக்கு எதிரானவை என்பது தெரிந்தும், புரமோட்டர்களிடம், பணத்தை வாங்கிக் கொண்டு, அரசு தரப்பில் இந்த மாற்றங்களைச் செய்து கொடுத்துள்ளனர். இத்தகைய அரசாணைகளை ரத்து செய்ய வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


மாநகராட்சியே ஆக்கிரமிக்கிறது!


மாநில அளவில் இப்படியொரு பிரச்னை என்றால், கோவையில் ரிசர்வ் சைட்களுக்கு வேறு விதமான ஆபத்து அதிகரித்து வருகிறது. பூங்கா, விளையாட்டு மைதானம் என்று ஒதுக்கப்பட்ட பொது ஒதுக்கீட்டு இடங்களை, புரமோட்டர்கள் அல்லது தனியார் ஆக்கிரமிப்பதைத் தடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள மாநகராட்சி நிர்வாகமே, அந்த இடங்களை நுாதன முறையில் ஆக்கிரமித்து வருகிறது.பொது ஒதுக்கீட்டு இடங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்புகளை புறம் தள்ளி, அந்த இடங்களில் மேல்நிலை நீர்த்தொட்டி, குப்பை தரம் பிரிப்பு மையம், சுகாதார வளாகம், சுகாதார ஆய்வாளர் அலுவலகம், பம்பிங் ஸ்டேஷன் போன்றவற்றை கோவை மாநகராட்சி நிர்வாகமே அமைத்து வருகிறது.ஒரு லே-அவுட்டில் இரண்டு ரிசர்வ் சைட் இருந்து, அதில் ஒன்றில் இப்படி ஏதாவது கட்டடம் கட்டினால் ஏற்றுக்கொள்ளலாம்.ஒரு லே-அவுட்டில் உள்ள ஒரே ஒரு பொது ஒதுக்கீட்டு இடத்தையும், இப்படிச் செய்வது ஏற்க முடியாதது.உதாரணமாக, கோவை பி.எஸ்.ஜி.வி., லே-அவுட்டில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பொது ஒதுக்கீட்டு இடத்தை மாநகராட்சி மீட்டது. அந்த இடத்தில் பல ஆயிரம் சதுரஅடி பரப்பில் சுகாதார ஆய்வாளர் அலுவலகமும், குப்பை தரம் பிரிப்பு மையமும் கட்டியுள்ளது. அந்த குடியிருப்பில் பூங்கா அமைப்பதற்கு இருந்த ஒரு வாய்ப்பும் பறிபோயுள்ளது.வடவள்ளி திரு.வி.க., நகரில், பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், குப்பை தரம் பிரிப்பு மையம் கட்டும் வேலையை துவங்கியது.


அதற்கு எதிராக அங்குள்ள குடியிருப்புவாசிகள் சிலர் சேர்ந்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததையடுத்து, அந்த கட்டுமானத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில் வரும் தீர்ப்பு, பொது ஒதுக்கீட்டு இடங்களில் நடக்கும் அரசு வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக, முக்கிய முடிவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாளை பார்ப்போம்...! -நமது சிறப்பு நிருபர்-

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X