விருதுநகர் : விருதுநகரின் முக்கிய நீராதாரமான அர்ஜூனாநதியில் நடக்கும் மணல் கொள்ளை, ஆக்கிரமிப்புகளால் இந்நதி காணாமல் போகும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் கான்சாபுரத்தில் துவங்கி கூமாபட்டி, வத்திராயிருப்பு கண்மாய்களை நிரப்பும் இந்நதி சுந்தரபாண்டியம், எரிச்சநத்தம், நத்தம்பட்டி, எம்.புதுப்பட்டி, ஆனைக்குட்டம், ஆர்.ஆர்.நகர், கோல்வார்பட்டி நீர்நிலைகளை நிரப்பி இருக்கன்குடி அணையில் முடிகிறது. இதன் உபரி நீர் வைப்பாற்றில் சென்றடைகிறது. நதியானது பாராமரிப்பின்றி நீரோட்ட பாதையில் கருவேல மரங்கள் அதிகம் ஆக்கிரமித்துள்ளன.
இேதாடு வடமலாபுரத்தில் காரிசேரி, சோரம்பட்டி ரயில்வே பாலம் பகுதிகளில் அதிகாலையில் மணல் திருட்டு ஜோராக நடக்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அர்ஜூனாநதி சிதிலமடைந்து வருகிறது. இப்படியே போனால் நதி இருந்ததற்கான அமையாளம் காணாமல் போகும் நிலை உள்ளது. இந்நதியை குடிமராமத்து பணி மூலம் மீட்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.