1.25 கிலோ கஞ்சா கடத்திய பள்ளி மாணவர் கைது | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
1.25 கிலோ கஞ்சா கடத்திய பள்ளி மாணவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 நவ
2020
11:44


எரியோடு : எரியோடு அருகே 1.25 கிலோ கஞ்சாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவரை போலீசார் கைது செய்தனர்.


திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் எலப்பார்பட்டி பிரிவு அருகே போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினர். வடமதுரை ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களுள் ஒருவர் தப்பியோடினார். சிக்கிய 17 வயது வாலிபரை விசாரிக்கையில் 1.25 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.


தப்பியவர் எரியோடு சசிக்குமார் 34, என்றும் சிக்கியவர் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் எனவும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மாணவனை கைது செய்து, தப்பிய சசிக்குமாரை தேடி வருகின்றனர்.வேடசந்துார்அண்ணா நகரை சேர்ந்தவர் கச்சம்மாள் 75. இவர் குடகனாறு ஓரத்தில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தார்.வேடசந்துார் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கியவரிடம், ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் கச்சம்மாளை கைதுசெய்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X