கவனிப்பாரின்றி சிதிலமடைந்து வரும் மயானங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2020
14:22


அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மயானங்கள் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது.இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் .மாவட்டத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் இறுதி சடங்குகள் செய்ய தனித்தனியாக மயானங்கள் உள்ளன. நகராட்சிகளில் இந்த வசதிகள் இருந்தாலும் அவைகள் பராமரிப்பின்றி இருப்பதால் இறுதி சடங்கு செய்ய வருவோர் சிரமப்படுகின்றனர்.



போதுமான மின் விளக்குகள், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இரவு நேரங்களில் மின்விளக்குகள் இன்றி இருளாக இருப்பதால் இறுதி சடங்கு செய்ய வருபவர்கள் சிரமப்படுகின்றனர். சடங்குகள் செய்ய வசதியான அறைகளும் இல்லை. கழிப்பறைகள் வசதிகள் சுத்தமாக இல்லை.இதிலும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மயானங்கள் நகராட்சிகளை விட மோசமான நிலையில் உள்ளன.


ஒவ்வொரு ஊராட்சிக்கும் நவீன வசதி கொண்ட மயானம் அமைக்க அரசானவது பல ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கியது. இந்நிதியை செலவழிக்க வேண்டுமே என்ற கடமையில் மக்களிடம் கருத்து கேட்காமல் கடமைக்கு ஒரு இடத்தில் மயானத்தை கட்டினர். இதில் பெரும்பாலான மயானங்கள் பயன்பாடு இல்லாமல் ஆடு, மாடுகள் மேயும் இடமாக , முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. மோசமான நிலையில் உள்ள மயானங்களில் தேவையான வசதிகள் செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பரமாரிப்பு அவசியம்


போதுமான வசதிகள் இல்லாமல் பராமரிப்பு இன்றி மயானங்கள் மோசமான நிலையில் உள்ளன. இரவு நேரங்களில் மின்விளக்கு எரியாமல் இருசக்கர வாகன விளக்குகளை எரிய விட்டு இறுதிசடங்குள் செய்ய வேண்டிய நிலை உள்ளது. காரியங்கள் முடிந்து குளிக்க உடைமாற்ற அறை வசதிகள் இல்லை. நகராட்சி ,ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மயானங்களை அவசியம் பராமரிப்பு செய்ய வேண்டும்.


சோலையப்பன், சமூக ஆர்வலர்

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X