போலீஸ் டைரி | சென்னை செய்திகள் | Dinamalar
போலீஸ் டைரி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 நவ
2020
00:13

வீட்டு பூட்டை உடைத்து திருட்டுஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், லாயிட்ஸ் அவென்யுவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம், 53. வழக்கறிஞரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம், தன் மனைவியுடன் வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த தர்மலிங்கம் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த, லேப் டாப், வெள்ளி ஆபரணம், 2,500 ரூபாய் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.பைக் திருடியவருக்கு 'கம்பி'அம்பத்துார்: அம்பத்துார் அடுத்த அண்ணாநகர் விரிவாக்கம், ரவுண்டு பில்டிங் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 32. இவர், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டு வாசலில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். சில நிமிடங்களில், அந்த வாகனம் திருடு போனது. இது குறித்து, ஜெ.ஜெ., போலீசார் நடத்திய விசாரணையில், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், பாடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ, 20, என்பவர் சிக்கினார். நேற்று காலை, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.காதலியின் தந்தையை அடித்தவர் கைதுஆவடி: திருமுல்லைவாயல், பாரதி நகர், 7வது தெருவைச் சேர்ந்தவர் சேகரன், 52; பெயின்டர். இவரது மகளை, பட்டாபிராம், செந்தமிழ் நகரை சேர்ந்த சாலமன், 21, என்பவர், காதலித்தாக கூறப்படுகிறது. நேற்று மதியம், 11:30 மணி அளவில், திருமுல்லைவாயல் பஸ் நிறுத்தம் அருகே, சேகரன் நடந்து சென்றார். அப்போது, அவரை வழிமறித்த சாலமன், அவரது மகளை காதலிப்பதாகவும், தனக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு, சேகரன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆத்திர மடைந்த சாலமன், அங்கிருந்த ஜல்லி கற்களால், சேகரனை சரமாரியாக தாக்கினார். காயமடைந்த சேகரன், ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரித்த, திருமுல்லைவாயல் போலீசார், நேற்று, சாலமனை கைது செய்தனர்.'பங்க்' ஊழியரை தாக்கிய இருவர் கைதுபம்மல்: பம்மல், நாகல்கேணியில், திருநீர்மலை மெயின்ரோட்டை ஒட்டி, பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. அங்கு, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஸ்வரன், 27, என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பெட்ரோல் போடுமாறு கூறினர்.அதற்கு, கமலேஸ்வரன், 'வாகனத்தை பம்ப் அருகில் எடுத்து வருமாறு' கூறியுள்ளார். ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், கமலேஸ்வரனை தாக்கினர். இதில், காயமடைந்த கமலேஸவரன், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து, நாகல்கேணியைச் சேர்ந்த சரவணன், 21, பல்லாவரத்தை சேர்ந்த சரத், 20, ஆகிய இருவரை கைது செய்தனர்.தொழிலாளி தற்கொலைஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், மண்ணடியம்மன் கோவில் பிரதான தெருவைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி, 39; கூலித் தொழிலாளி. இவரது மனைவி மேரி, 37. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். வேளாங்கண்ணியின் அதீத மது பழக்கத்தால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் கணவருடன் சண்டையிட்டு, கோயம்பேடில் உள்ள தாய் வீட்டிற்கு பிள்ளைகளுடன் மேரி சென்று விட்டார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட வேளாங்கண்ணி, நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து, ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஓய்வு பெற்ற ஆசிரியர் தற்கொலைசிட்லபாக்கம்: குரோம்பேட்டை அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர், ராமமூர்த்தி, 68. மீனம்பாக்கத்தில் உள்ள, தனியார் கல்லுாரியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், சில தினங்களாக, கொரோனா நோய் அச்சம் காரணமாக தவித்து வந்தார். மன உளைச்சலில் இருந்த ராமமூர்த்தி, நேற்று காலை, 5:00 மணியளவில், வீட்டின் பின்புறம் உள்ள, 30 அடி ஆழ கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். காலை, 8:00 மணியவில், அவரது உடல் கிணற்றில் மிதப்பதை கண்ட, ராமமூர்த்தியின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், உடலை மீட்டனர். சிட்லபாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X