தொற்றுநோயால் பாதிப்பு
குடியிருப்பு மத்தியில் உள்ள ஓடை கழிவுகளால் நிரம்பி உள்ளது. சிறிய மழை பெய்தாலும் சாக்கடை கலந்த நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. கொசு தொல்லை, துர்நாற்றத்தினாலும் பெரிதும் அவதிப்பட வேண்டியுள்ளது. வீட்டில் அமர்ந்து நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. தொற்றுநோயால் பாதிக்கிறோம்.கே.பத்மாவதி, குடும்பத்தலைவி
செயல்படாத சுகாதார வளாகம்
மகளிர் சுகாதார வளாகம் 7 மாதமாக செயல்படவில்லை. பெண்கள் பக்கத்து தெருவிற்கு செல்ல வேண்டியுள்ளது. இதன் அருகில் உள்ள பள்ளிக்கான சிறுவர்கள் சுகாதார வளாகமும் செயல்படவில்லை. குழாய் பதிக்க தோண்டிய ரோடை சீரமைக்காததால் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. வாகனங்கள் சேற்றில் சிக்குகிறது. குண்டும் குழியுமாக மாறி தெருவே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.எம்.பத்மாவதி, குடும்பத்தலைவி
வீடுகளுக்குள் வருது கழிவு நீர்
நடுத் தெரு ஓடை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் ஓடையில் செல்லாமல் ரோட்டில் ஓடுவதோடு வீடுகளுக்குள் வந்து விடுகிறது. தெற்கு தெருவில் சிறிய மழைக்கும் ரோடு சகதியாக மாறி விடுகிறது.பழனி, சமூக ஆர்வலர்