பெரும் அவதி! குடிநீருக்காக அல்லல்படும் கிராம மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2020
06:26

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் கிராம மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்காது அல்லல்படும் நிலையில் கிடப்பில் போடப்பட்ட மத்தியரசின் ' ஜல் ஜீவன் சக்தி ' திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.



மாவட்டத்தில் இன்றும் பல கிராமங்களில் சுத்தமான பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. பெரும்பாலான கிராம மக்கள் உப்பு சுவையுடன் கூடிய தண்ணீரை குடித்து கல்லடைப்பு, சிறுநீரக கோளாறு, தலைவலி உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகும் நிலை தொடர்கிறது.



மானுார் கூட்டு குடிநீர் திட்டம்,தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம்,சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம்,இருக்கன்குடி கூட்டு குடிநீர் திட்டம், வெம்பக் கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் என பல்வேறு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றியும் முறையான குடிநீர் கிராம மக்களை சென்று அடையவில்லை.பல கிராமங்களில் குடிநீர் வினியோகத்திற்கான பகிர்மான குழாய்கள் கூட பதிக்கப்படவில்லை. குழாய் பதிக்கப்பட்ட கிராமங்களிலும் மாதம் ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.



பல கிராமங்களில் மக்கள் ஊர் பொது கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து பிடித்து செல்வது இன்றும் நடைமுறையில் உள்ளது. சில கிராமங்களில் பெண்கள் குடங்களுடன் ஆறு, ஊரணி, கண்மாய் போன்ற பகுதிகளுக்கு சென்று ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கின்றனர். அடி குழாய்களில் வரும் உப்பு நீரை பிடித்து காய்ச்சி குடிநீராக பயன்படுத்துகின்றனர்.



அனைத்து கிராம மக்களும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்தியரசு ஊராட்சிகள் மூலம் குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை இலவசமாக வழங்க ஜல் ஜீவன் சக்தி திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் மாவட்டத்தில் எந்த கிராமத்திலும் இப்பணி நடக்கவில்லை. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் கிடப்பில் உள்ளது.



அலட்சியத்தால் அவலம்



மத்திய, மாநில அரசுகள் கிராம வளர்ச்சிக்காக பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குகின்றன. குறிப்பாக குடிநீருக்காக அதிகளவில் நிதி ஒதுக்குகிறது . ஜல் ஜீவன் சக்தி மூலம் குடிநீர் இணைப்பு வழங்க மத்தியரசு நிதி ஒதுக்கியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சித் தலைவர்கள் அலட்சியத்தால் இது போன்ற நல்ல திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இதனால் கிராம மக்களுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது கனவாகவே உள்ளது


-கணேசன், புகைப்படக்கலைஞர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X