அருப்புக்கோட்டை : விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ ., சார்பில் வேல் யாத்திரை நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் அருப்புக்கோட்டையில் நடந்தது.
மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல், மாநில துணைச்செயலர் ஈஸ்வரன், கோட்ட பொது செயலர் கணேசன், சிறுபான்மை பிரிவு தலைவர் தாஸ்வின் முன்னிலை வகித்தனர். தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர் நாகராஜன்,யாத்திரை பொறுப்பாளர் சசிராமன் பேசினர். யாத்திரையில் 2 லட்சம் பேர் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. மாவட்ட பொது செயலர்கள் ராஜ்குமார், பொன்ராஜ், மாவட்ட செயலர்கள் ஜெயராஜ், ராஜா, மண்டல தலைவர்காளிமுத்துக்குமார், மாவட்ட பொருளாளர் ராமஜெயம், மகளிர் அணி தலைவி காளீஸ்வரி, இளைஞரணி தலைவர் சீத்தாராமன் கலந்து கொண்டனர்.