13 ஆண்டுகள் கடந்தாச்சு ... பாடாய்படுத்தும் பாதாள சாக்கடை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2020
08:44

விருதுநகர் நகராட்சியில் 2007ல் ரூ.23.25 கோடி நிதி ஒதுக்கீட்டில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் மேற்பார்வையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இப்பணியை மேற்கொண்டது. 18 மாத காலத்தில் முடிக்க வேண்டிய பணியானது சில ஆண்டுகள் ஒப்பந்ததாரர்களின் அலட்சிய போக்கால் தள்ளி போனது. 2010ல் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.



தற்போது வரை பாதாள சாக்கடை பணி முடிந்த பாடில்லை. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய பணியை முரண்பாடுகளாலும், அலட்சியபோக்காலும் கிடப்பில் போடப்பட்டது. விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 13, 20, 21, 22, 31, 32, 36 வார்டுகளில் பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் முழுமையாக முடியவில்லை. மேற்கு, கிழக்கு பாண்டியன் காலனிகள், அல்லம்பட்டியின் ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் துளியளவும் துவங்கப்படவில்லை. ஒப்பந்ததாரர்கள், நகராட்சி ஊழியர்கள், இடைத்தரகர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள், பணம் தருபவர்கள் என வரைபடத்தில் இல்லாத பலருக்கு முறைகேடாக இணைப்பு கொடுத்தனர். இதனால் கழிவுநீர் ரோட்டில் கசியும் போது அடைப்பு எங்கே உள்ளது என தெரியாமல் முழு ரோட்டையும் சேதப்படுத்துகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக நடந்து வரும் இணைப்பு பணியிலும் வசூல் வேட்டை நடக்கிறது. தற்போது வரை ரூ.40 கோடி வரை நிதி ஒதுக்கியும் பாதாளசாக்கடை திட்டம் தோல்வியடைந்த திட்டமாகவே உள்ளது.



சாத்துார்



இதே போல மாவட்டத்தில் சாத்துார் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் பாதாளசாக்கடை பணி நடக்கிறது. பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்திற்கு 2011ல் ரூ.37.60 கோடி ஒதுக்கிபணிகள் துவங்கப்பட்டது. ஒப்பந்ததாரர் பணியை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் மறு டெண்டர் அறிவிக்கப்பட்டு 2017ல் மீண்டும் பணிகள் துவங்கின.

தற்போது 4300 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் 4700 இணைப்புகள் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. 2021 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்கின்றனர் நகராட்சி அதிகாரிகள். இருப்பினும் ஆமைவேகத்தில் நடக்கும் பணியால் கழிவுகள், ரோட்டிலும் பொதுவெளியிலும் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது.



விருதுநகர் ஓர் பாடம்



திட்டம் துவங்கும் போது 10 சதவீத மானியமே பெறப்பட்டது. அப்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் போராடி 30 சதவீதமாக உயர்த்தி பெற்றோம். இருப்பினும் தற்போது வரை திட்டம் முடிந்த பாடில்லை. பணிகள் தொடர்ந்து இழுபறியானால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகும். துவக்கத்தில் இணைப்பு எல்லாவற்றிற்கும் சேர்த்துதான் பாதாள சாக்கடைக்கு டெண்டர் விடப்பட்டது. தற்போது மீண்டும் இணைப்பு பணிகளுக்காக புதிய டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் பல பகுதிகளுக்கு இணைப்பு பணிகள் நடக்கவே இல்லை. புதியதாக ஒரு ஊரில் பாதாள சாக்கடை திட்டம் துவங்குபவர்கள் என்னென்ன தவறுகள் செய்ய கூடாது என்பதை ஆராய ஒரு முறை விருதுநகர் வர வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்திற்கு விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நல்ல பாடம்.

- பாலகிருஷ்ணசாமி, முன்னாள் நகர்மன்ற சேர்மன், விருதுநகர்.


ரோடுகள் கண்டமானதே மிச்சம்

விருதுநகரில் 13 ஆண்டுகளாக பாதாளசாக்கடை திட்டம் நடந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டு போடப்படும் ரோடுகள் கண்டமானதே மிச்சம். மனித கழிவுகள் சாக்கடையில் விடப்படுவது போன்ற செயல்பாடுகளும் அதிகரிக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு மட்டுமே சிறந்த பதிலாக இருக்கும். இந்த குளறுபடிகள் அனைத்திற்கும் நகராட்சி நிர்வாகம் உரிய வழிகாட்டுதல் படி தீர்வு காண வேண்டும். குடிநீர் வடிகால் வாரிய வரைபடம் மூலம் புதிய வரைபடம் தயாரித்த தெளிவான திட்டமாக இதை முன்னெடுக்க வேண்டும்.

- தீபக்குமார், டிரைவர்

விருதுநகர்.


மழைநீர் வடிகாலில் கழிவுநீர்



சாத்துாரில் 2017ல் துவங்கிய பாதாள சாக்கடை விரிவாக்க பணிகள் இன்று வரை நடக்கிறது பெரியார் நகர், சிதம்பர நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்டதால் இப்பகுதி முழுவதும் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பாதாள சாக்கடை பணிகள் சில சமயம் தள்ளி போடப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். சாத்துார் நான்கு வழிச்சாலையில் கிழக்கு சர்வீஸ் ரோட்டில் மழைநீர் வடிகாலில் கழிவுநீர் குளம் போல் தேங்குகிறது. பொதுமக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது.

- வேலுச்சாமி, வியாபாரி, சாத்துார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X