போலீஸ் டைரி.......
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2020
04:20

வாலிபர் தற்கொலை முயற்சிஅயனாவரம்: ஐ.சி.எப்., - எம்.டி.எச்., சாலையைச் சேர்ந்தவர் பிரபாகரன், 24; பட்டதாரி. சில தினங்களாகவே, வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மனமுடைந்த அவர், துாக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரது நண்பர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஐ.சி.எப்., போலீசார் விசாரிக்கின்றனர்.நகை திருடியவருக்கு காப்புகண்ணகிநகர்: காரப்பாக்கம், பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் சல்மான், 26. கடந்த மாதம், 28ம் தேதி, இவர் வீட்டின் பூட்டை உடைத்து, 16 சவரன் நகை திருடப்பட்டது. கண்ணகிநகர் போலீசார் விசாரணையில், கண்ணகி நகர், எழில்நகரைச் சேர்ந்த ஜெரால்டு, 30, என தெரிந்தது. நேற்று, இவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.தலைமறைவு குற்றவாளி சிக்கினார்கோயம்பேடு: கோயம்பேடு பகுதியில், இளம் பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்த நெற்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக், 27, என்பவர், 2018 ஜூலையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த அவர், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். நேற்று அவரை கைது செய்தனர்.சூதாடிய 13 பேர் சுற்றிவளைப்புஎம்.ஜி.ஆர்.நகர்: எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, பிள்ளையார் கோவில் தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, மனமகிழ் மன்றத்தில், 13 பேர் கும்பல், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அரும்பாக்கத்தைச் சேர்ந்த பர்வின்குமார், 37, மூர்த்தி, 47 உட்பட, 13 பேரை, நேற்று கைது செய்த போலீசார், 41 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கஞ்சா கடத்திய மூவர் கைதுமாங்காடு: புறநகரில், இரவு நேரங்களில், அதிக அளவில் கஞ்சா விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், முடிச்சூர் அருகே, இருசக்கர வாகனத்தில், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற, மூவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மூன்று பேரும், மாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அஜித், 21, தாம்பரத்தைச் சேர்ந்த அஜய்சாமி, 25, விஜய், 41, என்பதும், கஞ்சாவை மொத்தமாக வாங்கி, இரவு நேரங்களில், இருசக்கர வாகனத்தில் வைத்து, விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 3.5 கிலோ கஞ்சா, இரண்டு இருசக்கர வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டுஆவடி: ஆவடி, வசந்தம் நகர், கங்கை தெருவைச் சேர்ந்தவர் ஜோதி முருகன், 54; மளிகை கடைக்காரர். இவர் தன் மகனின் திருமணத்திற்காக, 6ம் தேதி துாத்துக்குடி சென்றார். நேற்று காலை, அவர் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு, 1.5 சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடி தப்பியது தெரியவந்தது.l பட்டாபிராம், பாரதியார் நகரில் செல்வராஜ், 36, என்பவர், 7ம் தேதி வீட்டைப் பூட்டி, அரியலுார் சென்று, பின் நேற்று அதிகாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 13 ஆயிரம் ரூபாய், 4 கிராம் தங்க கம்மல், 35 கிராம் வெள்ளி கொடி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.மொபைல் பறிப்பு வாலிபர் சிக்கினார்அண்ணாசாலை: ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சிஷன், 41. சில மாதங்களுக்கு முன், வீட்டின் வெளியே நின்றிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், இவரது மொபைல் போனை பறித்து தப்பினார். அண்ணாசாலை போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன், 24, என்பவர், மொபைல் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், மொபைல் போன் ஒன்றை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X