சாத்துார் : வீடுகளை சுற்றி மழை நீருடன் கழிவு நீர் என்பன போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் முகம் சுளிக்கும் நிலையில் முத்துநகர் மக்கள் உள்ளனர்.
சாத்துார் அயன் சத்திரப்பட்டி ஊராட்சி உட்பட்ட இந்நகர் பகுதியில் முறையான ரோடு, சாக்கடை வசதி இன்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். வீடுகளை சுற்றிலும் மழை நீருடன் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது. முறையான சாக்கடை வசதி இல்லாததால் சாக்கடை கழிவு ஆங்காங்கே தேங்கி கொசு உற்பத்திக்கு துணை போகிறது. கொசு இரவில் மட்டுமின்றி பகலிலும் கடிப்பதால் மர்ம காய்ச்சலுக்கு பலரும் ஆளாகின்றனர்.
இவ்வழியாக கருப்பசாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதிக்கின்றனர். தற்போது மழை பெய்வதால் சாக்கடையும் மழை நீரூம் பாதையில் தேங்கி நிற்கிறது. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல வழியின்றி ரோட்டில் நிறுத்தும் நிலை உள்ளது.