விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 7 ,93, 864 பெண், 8,33,81 ஆண், 183 இதரர் என 16,27 ,128 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் கண்ணன் கூறினார்.
இதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட அவர் கூறியதாவது: 2021 ஜன., 1 ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் இன்று (நேற்று) துவங்கி டிச.,15ல் நிறைவடைகிறது. இதில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் ,திருத்தங்கள் செய்வோர் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்கள், வட்ட, கோட்ட மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்பம் பெறலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஜன.,20 ல் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் நவ.,21, 22, டிச.,12, 13 ல் நடக்கிறது. 2021 ஜன.,1 அன்று 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்கள் , புதிதாக பெயரினை சேர்க்க விரும்புவோர் பயன்பெறலாம், என்றார்.