போலீஸ் டைரி...... | சென்னை செய்திகள் | Dinamalar
போலீஸ் டைரி......
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 நவ
2020
04:58

கத்தியுடன் திரிந்த இருவருக்கு 'காப்பு'செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், ஜோதிநகர், 10வது தெருவைச் சேர்ந்தவர் பிரசாத், 22. கொலை வழக்கில் சிக்கியவர். அவரது நண்பர், ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த, தனியார் கல்லுாரி மாணவர் விக்னேஸ்வரன், 20. இருவரும், நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில், கத்திகளுடன் திரிந்தனர். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த செங்குன்றம் போலீசார், அவர்களை கைது செய்து, கத்தி, வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.அடிதடி தகராறில் இருவர் கைதுமயிலாப்பூர்: மயிலாப்பூர், ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அசோக், 20. இவர், 14ம் தேதி இரவு, திருவீதியம்மன் கோவில் தெரு வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அங்கு, மது போதையில் இருந்த நான்கு பேர், அவரை வழிமறித்து வீண் தகராறு செய்து, கத்தியால் அசோக் கழுத்தில் கீறியுள்ளனர். இதில் அவருக்கு, எட்டு தையல் போடப்பட்டது. மயிலாப்பூர் போலீசார் விசாரித்தனர். இதில், திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துராமன், 28, செல்வமணி, 34, ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். இருவரை தேடி வருகின்றனர். மேலும், அசோக்கின் இரண்டு சவரன் செயின் மாயமானது குறித்தும் விசாரிக்கின்றனர்.பஸ்சில் மொபைல் பறித்தவருக்கு வலைமணலி: மாதவரம், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் பழனி, 51, அம்பத்துார், தனியார் நிறுவனத்தில், 'ஹவுஸ் கீப்பிங்' வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மீஞ்சூரில் துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று, தடம் எண்: 56டி மாநகர பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, உடன் பயணித்த மர்ம நபர் ஒருவர், மணலி மார்க்கெட் பஸ் நிறுத்தம் வந்தபோது, பழனியின் மேல்சட்டை பையில் இருந்த, விலையுயர்ந்த மொபைல் போனை எடுத்து, ஓட்டம் பிடித்தார். செய்வதறியாமல் திகைத்தவர், கூச்சலிட்டபடி மர்மநபரை பிடிக்க முயன்றார். இருப்பினும், அவர் மின்னல் வேகத்தில் தப்பியோடினார். இது குறித்து, மணலி போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுமி மாயமானது குறித்து புகார்ஐஸ்ஹவுஸ்: ராயப்பேட்டை, வாத்தியார் சின்னையா தெருவைச் சேர்ந்தவர் மாணிக்க செல்வி, 42. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று காலை, அவரது, 13 வயது மூத்த மகள், பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அச்சம் அடைந்த அவரது தாய், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில், அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.மது அருந்தியவர் திடீர் மரணம்கண்ணகிநகர்: கண்ணகிநகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் லாசர், 56; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம், மது அருந்திவிட்டு, வீட்டின் அருகில் சென்றபோது, மயங்கி விழுந்தார். அருகில் உள்ள, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பலியானார். கண்ணகிநகர் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.சவாரிக்கு மறுத்த ஓட்டுனர் மீது தாக்குபுழல்: புழல் அடுத்த கதிர்வேடு, மில் குடியிருப்பைச் சேர்ந்தவர் பாலசங்கர், 27; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, புழல் அண்ணா நினைவு நகர் வழியாக, ஆட்டோவில் வீட்டிற்கு சென்றார். அப்போது, ஆட்டோவை வழிமறித்த ஐந்து பேர், கொளத்துாருக்கு செல்ல வேண்டுமென கூறி, ஆட்டோவில் ஏற முயன்றனர். ஆனால், 'சவாரிக்கு வர முடியாது' என, பாலசங்கர் மறுத்தார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், அவரை சரமாரியாக தாக்கினர். இதில், பாலசங்கர் பலத்த காயமடைந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.திருட்டில் ஈடுபட்ட டீக்கடைகாரர் கைதுஆவடி: திருமுல்லைவாயலில் வசித்து வருபவர் மனோகரன், 58. இவருக்கு சொந்தமான வீடு ஆவடி, பக்தவச்சலபுரம், அய்யப்பன் கோவில் தெருவில் உள்ளது. நேற்று முன்தினம் மதியம், மர்மநபர் ஒருவர், மது போதையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அக்கம்பக்கத்தினர் ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சென்று, வீட்டில் இருந்து, 'டிவி' திருடி, புறப்பட்ட அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அந்த நபர் திருவண்ணாமலை, ஆரணி பகுதியைச் சேர்ந்த டீக்கடைக்காரரான முரளி, 48, என்பதும், மதுபோதையில், தன் மருமகனின் இருசக்கர வாகனத்தில், ஆவடிக்கு திருடச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தானர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X