வாலிபர் மர்ம சாவு
சாத்துார்: அர்ச்சுனாபுரம் சுதாகர் 22. சிந்துவம்பட்டியில் உள்ள மனைவியை அழைக்க டூவீலரில் சென்றார். நத்தத்துபட்டி அருகில் முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்தார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆடு திருடிய பட்டதாரிகள்
சிவகாசி: நெடுங்குளம் கோபாலன்பட்டி ராஜதுரை. இவரது ஆட்டு கிடாயை பேரையூர் சின்னரெட்டியபட்டி பட்டதாரிகள் நாகராஜ் 26, ராமர் 25, ஆகியோர் திருடி டூவீலரில் துாக்கி சென்றனர். இருவரையும் எம்.புதுப்பட்டி போலீசார் கைது செய்தனர். பிச்சுபட்டி ஜெயமுருகனின் ஆடு திருடு போனது குறித்து விசாரிக்கின்றனர்.
34 மனுக்கள் மீது தீர்வு
ராஜபாளையம்: கிருஷ்ணாபுரத்தில் போலீஸ் டி.எஸ்.பி., நாகசங்கர் தலைமையில் குறைதீர் முகாம் நடந்தது. பணம் கொடுக்கல், வாங்கல், குடும்ப பிரச்னை உள்ளிட்ட 34 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.
விபத்தில் பெண் பலி
விருதுநகர்: சின்னவாடியூர் சித்திரவேல் மனைவி வள்ளியம்மாளுடன் 65, டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) கோவில்பட்டி செல்லும் நான்கு வழிச்சாலையில் சென்றபோது வள்ளியம்மாளின் சேலை டூவீலர் சக்கரத்தில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தார். தலைக்காயம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.