விருதுநகரில் பெரும்பாலான ரேஷன் கடைகள் பழுதான கட்டடங்களில் செயல்படுகிறது. மழை பெய்தால் மேற்கூரையில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டு சுவர்கள் ஈரமாகி விடுகிறது. சேதமான ஜன்னல்கள் வழியாக சாரல் கடைக்குள் விழுகிறது. இவை உணவு பொருட்கள் மீது விழுந்து பூஞ்சாணம் பிடிக்கிறது. வாடகை கட்டடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கும் இதே நிலை தான். ரேஷன் கடைகள் தரமான கட்டடங்களில் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.