போலீஸ் டைரி,,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2020
05:40

280 கிலோ குட்கா பறிமுதல்ஆவடி: போதைப்பொருள் புழக்கம் குறித்து, அம்பத்துார் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார், முத்தாபுதுப்பேட்டையில், நேற்று முன்தினம் இரவு, திடீர் சோதனை நடத்தினர். இதில், முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்னமல்லி பகுதியில் உள்ள பொன்ராஜ், 34, என்பவரது, பலசரக்கு கடையில், 128 கிலோ குட்கா சிக்கியது. அவரிடம் விசாரித்ததில், ஆவடி, திருமலைராஜபுரத்தில் உள்ள மகேந்திரகுமார், 33, என்பவரது மிட்டாய் கடையில், 152 கிலோ குட்கா சிக்கியது. மொத்தம், 280 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.துணிக்கடை ஊழியர் தற்கொலை முயற்சிவடபழநி: தி.நகர், வரதராஜு முதலி தெருவைச் சேர்ந்தவர் திருமுருகன், 33. இவர், ராமாபுரத்தில் உள்ள துணிக்கடையில் ஊழியராக பணிபுரிகிறார். இவர், வடபழநியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமுருகனின் நடத்தை சரியில்லாததால், அப்பெண் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு, இளம் பெண்ணின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வடபழநி போலீசார் விசாரிக்கின்றனர்.துணி உலர்த்த சென்ற பெண் பலிஎழும்பூர்: புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சவீதா, 25. நேற்று காலை, இரண்டாம் தளத்தின் பால்கனியில், துணி உலர வைக்க முற்பட்டார். அப்போது, திடீரென கால் இடறி, கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அவரது கணவர் மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.முதியவரிடம் மொபைல் பறிப்புசூளைமேடு: அரும்பாக்கம், திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் ராஜு, 62; ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியர். நேற்று காலை, 100 அடி சாலையில் நடந்து சென்றபோது, டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.முதியவர் தற்கொலைசேலையூர்: கிழக்கு தாம்பரம், சேலையூர் அடுத்த அகரம்தென், எம்.ஜி.ஆர்.நகர், ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 68; ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர். மதுவுக்கு அடிமையான முத்துகிருஷ்ணன், குடித்துவிட்டு, வீட்டிற்கு செல்லாமல், சாலையில் ஆங்காங்கே துாங்கி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டின் அருகில் உள்ள கடை வாசலில், முத்துகிருஷ்ணன் வேட்டியால், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X