கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் மதுரைசாமி கூறியுள்ளதாவது: எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, தும்பைபட்டி, அட்டப்பட்டி உள்ளிட்ட 21 கிராமங்களில் 7 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆக., முதல் நவ., வரை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் டிச., 15 க்குள் காப்பீடு செய்ய வேண்டும்.
நெல் பயிருக்கு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.31 ஆயிரம் பெற ரூ.465, ஒரு தென்னை மரத்திற்கு ரூ.1950 பெற நன்றாக காய்க்கும் நிலையில் உள்ளது என்ற சான்றுடன் ஒரு மரத்திற்கு ரூ.3.50 வீதம் செலுத்த வேண்டும்.
விவசாயிகள் முன்மொழிவு படிவத்துடன் ஆதார், வங்கி கணக்கு புத்தகம், கணினி சிட்டா மற்றும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்ததற்கான அடங்கலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அல்லது இ சேவை மையத்தில் சமர்ப்பித்து காப்பீடு செய்யலாம், என கூறியுள்ளார்.