உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம், மானாவாரி பகுதி மேம்பாடு, ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டங்கள் மூலம் உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது.வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், துணை இயக்குனர் அமுதன், உதவி இயக்குனர்கள் ராமசாமி, விமலா, தோட்டக்கலை அலுவலர்கள் தாமரைச்செல்வி, ஜெசிமாபானு, கால்நடை மருத்துவர்கள் பங்கேற்றனர்.அட்மா திட்ட பணியாளர்கள் இந்திராதேவி, மாரிமுத்து, சுரேஷ் ஏற்பாடுகளை செய்தனர்.