குன்றத்துார்; குன்றத்துாரை அடுத்த, சோமங்கலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, 54; மீன் வியாபாரி. நேற்று முன்தினம், இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில், பெட்ரோல் கேன் வைத்து, வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, மூர்த்தி சிகரெட்டை பற்ற வைத்தபோது, பெட்ரோல் கேன் மீது, தீப்பொறி விழுந்து, தீ பிடித்து எரிந்தது. அடுத்த நிமிடத்தில், தீ மூர்த்தியின் உடலில் பற்றி எரிந்தது.இதில், படுகாயமடைந்த மூர்த்தியை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மூர்த்தி, நேற்று இரவு இறந்தார். இந்த விபத்து குறித்து, குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.