காரியாபட்டி:காரியாபட்டி அருகே இரு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில்பி.டி.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.காரியாபட்டி மயிலி கண்மாய் செல்லும் வரத்து கால்வாயை இடையன்குளம் கிராமத்தினர் மறித்தனர். இதனால் இரு கிராமத்தினர் இடையே அடிக்கடி பிரச்னை உருவானது. நீதிமன்ற உத்தரவுப்படி மயிலி கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இடையன்குளம் கிராமத்தினர் கால்வாயை அடைத்தனர். தற்போது பருவ மழையால் அதிக அளவில் மழை நீர் வரத்துக்கால்வாயில் வருகிறது. இதை திறந்து விட கோரி மயிலி கிராமத்தினர் அதிகாரிகளிடம் கோரினர். தாசில்தார், பி.டி.ஓ., சத்தியவதி மற்றும் போலீசார் கால்வாயை திறந்தனர். இடையன்குளம் கிராமத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதிகாரத்தை கையில் எடுத்ததாக குறிப்பிட்டு பி.டி.ஓ., வை கலெக்டர் தற்காலிக பணிநீக்கம் செய்தார். இதை திரும்பபெறகோரி ஒன்றிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.