ஸ்ரீவில்லிபுத்துார்: அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் பல்லாங்குழியான ரோட்டினை சீரமைக்ககோரி மார்க்சிஸ்ட் சார்பில் நரியன்குளத்தில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் சசிக்குமார், மாநிலக்குழு உறுப்பினர் சுகந்தி மற்றும் ஊர்பொதுமக்கள் பங்கேற்றனர். பிள்ளையார்குளம் ஊராட்சி புதுாரில் சுகாதாரகேட்டை சீரமைக்ககோரி, மார்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் லட்சுமி தலைமையில் நாற்றுநடும் போராட்டம் நடந்தது.