சூலக்கரை: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் - நான்கு வழிச்சாலையோரம் உள்ள ஆவின் பாலகம் வளாகத்தில் அழகு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அழகு பூங்காவில் செம்பருத்தி, அரளி, இட்லி பூக்கள் அணிவகுப்பு கண்ணுக்கு விருந்தளிக்கிறது. ஓய்வு, விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் குதுாகலிக்கின்றனர்.விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கன்னியாகுமரி, கேரளா மார்க்கமாக செல்லும் சுற்றுலா பயணிகள் ஆவின் பாலகத்தில் ஓய்வெடுக்க நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சிறுவர் பூங்கா, நர்சரி கார்டன், புல் வெளி, பூச்செடிகள் அணி வகுக்கின்றனர். நடை பாதை, சிறுவர் விளையாட விளையாட்டு உபகரணங்கள் என வசதிகள் ஏராளம். செயற்கை நீரூற்று, இரவு நேரத்தில் மின்னொளியில் பூங்கா ஜொலிக்கிறது. முறையாக பூங்காவை பராமரிப்பதால் அழகிற்கு அழகு சேர்க்கிறது.இங்குள்ள நர்சரி கார்டனில் இட்லி பூ, செம்பருத்தி பூ, அரளிப்பூ செடிகள் நேர்த்தியாக வளர்க்கப்பட்டு வருகிறது. நடை பாதையை தவிர்த்து நர்சரி கார்டன் முழுவதும் புல் தரைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. ஐஸ் கிரீம், ஜாக்லேட், பாதாம் பால், ஆவின் பால், ஆவின் காபி, பால்கோவா என ருசி பிரியர்களின் தேவை முழுமையாக நிறைவேற்றப் படுகிறது. வாகனங்களை பார்க்கிங் செய்யவும், சுகாதார வளாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்புக்கு 73392 81545.
குடும்பமாக வருகை
கொரோனா ஊரடங்கிலும் ஆவின் பாலகம் செயல்பட்டது. விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வருகின்றனர். நர்சரி கார்டன், சிறுவர் பூங்கா, புல் வெளிகள் சிறந்த பொழுது போக்கு அம்சமாகும். ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவா, சென்னை ஐஸ்கிரீம், பால் பவுடர், பாதாம் பால் பவுடர், நெய் என அனைத்து ஆவின் பால் பொருட்களும் கிடைக்கிறது. தினமும் காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படுகிறது.
பாண்டீஸ்வரி, விற்பனையாளர், ஆவின் பாலகம்