விருதுநகரில் இஸ்ரேல் தொழில் நுட்பத்துடன் கூடிய பசுமைக்குடில் (பாலி ஹவுஸ்) அமைத்து வெள்ளரிக்காய் உற்பத்தி பெருமளவு நடக்கிறது.
இக்காய்களின் நீளம், அகலம், எடை, அடர்த்தி, நிறம் என அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. ஸ்டார் ஓட்டல்கள், விருந்துகளில் இடம் பிடிக்கும் நாகரீக வெள்ளரிக்காய் என புகழ் பெற்றுள்ளது. இதை கூடுதல் நிலப்பரப்பில் விளைவிக்க இயலாது. இயற்கை உரம், பூச்சி தாக்குதல் ஏற்படாதவாறு அரசே நிலங்களை நிர்வகிக்கும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை அரசே நியாயமான விலைக்கு கொள்முதல் செய்யும். இதனால் விவசாயிகளுக்கு கை நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அதன்படி விருதுநகரில் முதல் முறையாக இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் கூடிய பசுமைக்குடில் அமைத்து வெள்ளரிக்காய் உற்பத்தி செய்கிறார் திருத்தங்கல்லை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சிவபிரகாசம். இக்காய்களின் நீளம், அகலம், எடை, அடர்த்தி, நிறம் என அனைத்தும் ஒரே மாதிரியாக பார்ப்பதற்கு அழகான தோற்றத்துடன் நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்து காணப்படுவது தனிச்சிறப்பு வாய்ந்தது.
ஸ்டார் ஓட்டல்கள், விருந்துகளில் இடம் பிடிக்கும் இது நாகரீக வெள்ளரிக்காய் என புகழ் பெற்றுள்ளது. நாட்டு வெள்ளரிக்காய் போல் பூச்சித்தாக்குல் இருக்காது. பூச்சி மருந்து தெளிப்புக்கும் வழியில்லை. தென்னை நார்க்கழிவை மூலப்பொருளாக கொண்டு உற்பத்தி செய்கின்றனர்.