விருதுநகர்: விருதுநகர் கடம்பன்குளம் இந்து நடுநிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தின விழா நடந்தது.
வி.ஏ.ஓ., மதன்குமார் தலைமை வகித்தார். வேல்டு விஷன் இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். 2019 - -20 திறனாய்வு தேர்வில் வென்ற மாணவிகள் கார்த்திகா, ராகசுதா, பவானிஸ்ரீ, நிதர்த்தினிக்கு முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, அருங்காட்சிய காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் பரிசுகள் வழங்கினர். எஸ்.ஐ., கந்தசாமி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு சமூக பணியாளர் கார்த்திகைராஜன், யூனிசெப் திட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சைல்டு லைன் பணியாளர் பழனிமுருகன், அங்கன்வாடி பணியாளர் கலாதேவி, ராமலெட்சுமி செய்தனர்.