விருதுநகர் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2020
16:34

விருதுநகர்: கந்த சஷ்டி விழாவை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடந்தது.இதில் சமூக இடைவெளியுடன் பங்கேற்ற பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி தரிசித்தனர்.



முருகன் கோயில்களில் கந்த சஷ்டி பெரு விழா நவ. 15 ல் துவங்கியது. முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். இதன் ஆறாம் நாளான நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலை 8:45 மணிக்கு யாக சாலை, வேல் பூஜை, காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தன. மாலை 4:35 மணிக்கு மேல் 5:000 மணிக்குள் முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.



இதை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதமாக முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இது போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களில் நடந்த சூரசம்ஹாரத்தில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து பங்கேற்ற பக்தர்கள் அரோகரா, கந்தனுக்கு அரோகரா கோஷம் எழுப்பி முருகபெருமானை தரிசித்தனர். இதை தொடர்ந்து இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. இதை முன்னிட்டு கோயில்களில் காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மாலை 6:05 மணிக்கு கும்ப பூஜை, யாக பூஜை, வைதீக சடங்குகள் நடக்கிறது.




சாத்துார் : ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோயிலில் நேற்று மாலை 5:45 மணிக்கு சூரசம் ஹாரம் நடந்தது. கோயிலில் இருந்து புறப்பட்ட சுவாமி, சூரர் நான்கு ரத வீதி வழியாக வலம் வந்தனர். கோயில் முன்பு சுவாமி சூரனை வதம் புரிந்தார். பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வணங்கினர்.



ஸ்ரீவில்லிபுத்துார்: மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் கோயில் வளாகத்திற்குள் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று மாலை 6:15 மணிக்கு சண்முகர், சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகளை ரகுபட்டர் நடத்தினார். பின்னர் சூரனை முருகபெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசித்தனர்.



வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா ரத்தானதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடக்கும் சூரசம்ஹாரம் கொரோனா காரணமாக நடக்கவில்லை. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X