சிறுவர்களை புத்திசாலியாக்கும் பயிற்சி பள்ளி:அமெரிக்கா தேர்தல் முடிவை கணித்த மாணவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2020
11:42

விருதுநகர்: எண்ணங்கள் தான் வாழ்வின் வண்ணங்கள் என்பது போல் எண்ணங்களாலே தான் ஒரு மனிதனின் வாழ்க்கை வெளிச்சம் பெறுகிறது. சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம் பெரும் துன்பங்கள் தவர்க்கப்படுகின்றன.


மனிதனை இயக்குவதில் ஆழ்மனம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை வளப்படுத்தினாலே அதன் மூலம் அவர்களது இலக்கை எளிதில் நிறைவேற்ற முடியும். இதை சிறுவயதில் இருந்து செய்வதன் மூலம் நல்ல தரமான சமூகத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் சிறுவர்களை புத்திசாலியாக்கும் டைனமிக் பிரைன் எனும் பயிற்சி பள்ளியை ராமசாமி என்பவர் விருதுநகர் அருகே சூலக்கரை மேட்டில் நடத்தி வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சனி, ஞாயிறுகளில் ஆர்வத்துடன் சமூக இடைவெளியை பின்பற்றி இப்பயிற்சியை கற்கின்றனர். 2 மணி நேரம் மட்டுமே நடக்கும் இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக தரப்படுகிறது. பயிற்சியால் கற்பனை திறன், படிப்பில் ஆர்வம், கவனிக்கும் திறன், தலைமை பண்பு, தன்னம்பிக்கை ஏற்படுகிறது.



இப்பயிற்சி பள்ளி மாணவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் தான் ஜெயிப்பார் என முன்னதே கூறினர். அதே போன்றே ஜோ பிடனும், கமலா ஹாரிஸூம் வென்றனர். மாணவர்கள் கண்களை கட்டி கொண்டு அலைபேசியை ஒரு இடத்தில் மறைத்து வைத்தால் எளிதில் கண்டறிந்து விடுகின்றனர். தொடு உணர்வு மூலம் வாகனங்களை தொட்டே அதன் எண்ணை கூறுகின்றனர். மூளையை வலுவாக்கும் எளிய உடற்பயிற்சிகளும், அதன் மூலம் புத்தி கூர்மையை வலிமைப்படுத்தும் செயல்பாட்டு முறைகளும் கற்பிக்கப்படுகின்றன. தொடர்புக்கு: 99946 72719.


தொழில்நுட்பத்திலும் ஜெயிக்க முடியும்




வருங்கால இந்தியாவுக்கு புத்திசாலிகள் தான் அதிகம் தேவைப்படுகின்றனர். நிலைமையை உணர்ந்து துரிதமாக முடிவெடுக்க கூடிய பலர் தேவைப்படுகின்றனர். அதற்கு இம்மாதிரியான பயிற்சிகள் அதிகளவில் உதவும். வல்லரசாகும் இந்தியாவால் மட்டுமே அந்நிய நாடுகளிடம் போட்டி போட்டு தொழில்நுட்பத்திலும், பிற வளர்ச்சிகளிலும் ஜெயிக்க முடியும்.
ராமசாமி, நிறுவனர், டைனமிக் பிரைன் பள்ளி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X