சாத்துார்:
ஸ்ரீவில்லிபுத்துார் மல்லியை சேர்ந்தவர் பூவியாபாரி செந்தில்குமார் 27. இருசக்கர வாகனத்தில் (ஹெல்மெட் அணியவில்லை) மீனாட்சிபுரம் விலக்கில் சென்றார். எதிரில் வந்த லோடு ஆட்டோ மோதியது.
சிவகாசி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் செந்தில்குமார் இறந்தார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை வேன் டிரைவர் மாரிமுத்துவை 45, வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.