அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டி, அரசகுளம், ஆவியூர், குரண்டி, மாங்குளம் கிராமங்களில் வெங்காய பயிர்களில் நோய் பரவி வருகிறது.
அருப்புக்கோட்டை மண்டலவேளாண் ஆராய்ச்சி நிலைய நோய் பாதுகாப்பு வல்லுநர் மாரீஸ்வரி, இணைப் பேராசிரியர் ராஜதுரை, தோட்டக்கலை உதவி இயக்குனர் கார்த்திக் ஆய்வு செய்தனர்.காய் காய்க்கும் போது சிறுத்து, நீண்டு அழுகி காணப்படும். இதை தடுக்க பயிர் கழிவுகளை அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும். தொழு உரத்துடன் பேசில்லஸ் கரைசல் கலந்துஇட வேண்டும். வெங்காயத்தை நடுவதற்கு முன் பேசில்லஸ் கரைசலில் அரை மணி நேரம் ஊறவைத்து நடலாம். மருந்து தெளிப்பதை பனிபடர்ந்த நேரத்திலோ, மழைக்காலங்களில் தெளிக்க கூடாது என, அறிவுறுத்தி உள்ளனர்.