விருதுநகர்:விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.கே..எஸ்.எஸ்.என்., நினைவு நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் தொடர்பாக நடக்கும் சிறப்பு முகாம்களை கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது: 2021 ஜன. 1ல் 18 வயது நிரம்பியவர்கள், இதுவரை பட்டியலில் இடம்பெறாதவர்கள், நீக்கம், திருத்தம், இடமாற்றம் விரும்புவோர்கள் நவ. 16 முதல் டிச. 15 வரை அலுவலக வேலை நாட்களில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
மாவட்டத்தில் 1881 ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று, டிச 12, 13ல் சிறப்பு முகாம்கள் நடக்கிறது, என்றார்.
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கீதா, தாசில்தார் முத்துலெட்சுமி, ஓட்டுச்சாவடி மண்டல அலுவலர் ரவிசந்திரன் பங்கேற்றனர்.