சிவகாசி:மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களை தேடி சென்று பணம் வசூல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் சிரமப்படுகின்றனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற கார், டூ வீலர் உள்ளிட்ட வாகனங்களுக்கு டிராபிக் போலீசார் விதிமுறைகளைக்கு ஏற்ப அபராதம் விதிப்பர். ஒராண்டுக்கு முன்பு வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு சலான் எழுதி'ஸ்பாட் பைன்' வசூலிப்பர். இதனால் பணம் உடனடியாக வசூலானது.
ஒரு மாதத்திற்கு முன் ஸ்பாட் பைன் வசூலிக்காமல் ஆல்லைன் மூலமாக அபாரதம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டவர் உடனடியாக பணம் கட்டுவதில்லை.
கார், ஆட்டோ போன்ற வாகனங்களின் உரிமையாளர்கள் உடனடியாக பணத்தை செலுத்தி விடுகின்றனர். டூ வீலர் உரிமையாளர்களில் 70 முதல் 80 சதவீதம் பேர் அபராதம் செலுத்தவில்லை.
இப்பணத்தை வசூலிக்க போலீசாரை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் சம்மன் அனுப்பி வசூலிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே போலீசார் பற்றாக்குறையால் திணறி வரும் நிலையில் இதன் கூடுதல் பணியால் போலீசார் திணறுகின்றனர்.