ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பருவ மழையால் பேயனாற்றில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு செண்பகதோப்பு பேச்சியம்மன் கோயிலுக்கு செல்லும் பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.
இவ்வழியாக டூவீலர்கள், இலகு ரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பேச்சியம்மன், காட்டழகர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும், விளைபொருட்களை கொண்டு செல்லமுடியாமல் விவசாயிகளும் பரிதவிக்கின்றனர்.ஓடையில் நீர்வரத்து இருப்பதால் உடனடியாக சீரமைப்பு பணியை துவங்க இயலவில்லை. மம்சாபுரம் போலீசார், வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.