அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் பழமையும், புராதான சிறப்பும் வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பக்குளம் உள்ளது.
இதில் குளித்தால் தீராத நோய் விலகும் என்பது நம்பிக்கை. தெப்பத்தை பராமரிக்காமல் விட்டதால் மழைநீர் வர முடியாமல் கழிவு நீர் குளமாக மாறியது.மழை நீர் வரத்து ஓடைகள் அடைபட்டு புதர்கள் மண்டின. இதையறிந்த அம்மா ரத்ததான கழக மாநில தலைவர் ராம்பாண்டியன், தன்னார்வலர்களுடன் இணைந்து தெப்பத்தை துார் வாரி ஆழப்படுத்தினார். மழை நீர் வரும் ஓடையை சுத்தப்படுத்தி முட்புதர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.