பெரம்பலுார்:அரியலுார், தெற்கு ஆயுத களம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 23; வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற இவர், இரவு வீட்டிற்கு வரவில்லை. நேற்று காலை, இவரது பட்டறை அருகே, ரத்தம் சிதறி கிடந்தது. அப்பகுதியினர், ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் வந்து சோதனையிட்டதில், அப்பகுதியில் கழிப்பறை செப்டிக் டேங்கில், பிரவீன்குமார் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டு இருந்தார். உடலை தோண்டி எடுத்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.