பெரம்பலுார் : அரியலுார் அருகே, வாலிபர் கொலை வழக்கில், இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அரியலுார், தெற்கு ஆயுதகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 23. வெல்டிங் பட்டறை தொழில் செய்து வந்த இவர், கடந்த, 22ம் தேதி கொலை செய்யப்பட்டு, இவரது பட்டறை அருகே, கழிப்பறை செப்டிக் டேங்கில் சடலமாக கிடந்தார்.ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணையில், தெற்கு ஆயுதகளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ், 20, என்பவர், முன்விரோதம் காரணமாக பிரவீன்குமாரை வெட்டிக் கொலை செய்து, செப்டிக் டேங்கில் புதைத்தது தெரிந்தது. கிருஷ்ணராஜை நேற்று கைது செய்தனர்.