திருவெண்ணெய்நல்லுார்- திருவெண்ணெய்நல்லுார் அருகே மது பாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கரடிபாக்கம் கிராமத்தில் மது பாட்டில் விற்பனை செய்வதாக திருவெண்ணெய்நல்லுார் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பலராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த சீனன் மகன் சேகர், 32; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 28 மதுபாட்டில்கள் மற்றும் 5 லிட்டர் சாராயம், பைக்கை பறிமுதல் செய்தனர்.