பல்லாவரம்; கவுல்பஜாரில் இருந்து, பல பகுதிகளுக்கு பஸ் சேவை நிறுத்தப்பட்டதை கண்டித்து, 50க்கும் மேற்பட்டோர், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பிழைப்புபம்மலை அடுத்த பொழிச்சலுார், கவுல்பஜார் பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், காய்கறி, பூ விளைச்சல் நடக்கிறது. இத்தொழிலை நம்பி, ஏராளமானோர் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.அப்பகுதி மக்களின் வசதிக்காகவும், பூ, காய்கறிகளை வியாபாரத்திற்கு எடுத்து செல்வதற்காகவும், தடம் எண்: எஸ்.41 என்ற, 'மினி பஸ்' இயக்கப்பட்டது.அப்பேருந்து, குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து, பல்லாவரம், ஸ்டேட் பேங்க் காலனி, மூவர் நகர், ஆண்டாள் நகர், முனீஸ்வரன் கோவில், கவுல்பஜார் வழியாக சென்று வந்தது.இது, மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வியாபாரிகளுக்கு வசதியாக இருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை அடுத்து நிறுத்தப்பட்ட இந்த பஸ், சில வாரங்களாக, மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.கடும் அவதிஆனால், பழைய வழித்தடத்தில் இயக்காமல், கவுல்பஜார் போலீஸ் பூத் வரை வந்து, மீண்டும் திரும்பி சென்று விடுகிறது. இதனால், மற்ற பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.இதையடுத்து, மினி பஸ்சை மீண்டும், பழைய வழித்தடத்திலேயே இயக்க வேண்டும் என்ற, கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் கண்டுக்கொள்ளாததால், நேற்று காலை, 50க்கும் மேற்பட்டோர்,'மினி பஸ்'சை வழிமறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் விரைந்து பேச்சு நடத்தி, மீண்டும்,பழைய வழித்தடத்திலேயே இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.