பள்ளிக்கரணை - பள்ளிக்கரணை, ரேடியல் சாலையில் அனுமதியின்றி பேனர் வைத்த தண்ணீர் லாரி சங்க தலைவர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.சென்னை, பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் நிஜலிங்கம் தலைமையில், ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.இதன் வரவேற்பிற்காக, விளம்பர பேனர் சாலையோரம் வைக்கப்பட்டது. கூட்டம் முடிந்து இரண்டு நாட்களாகியும், பேனர் அகற்றப்படவில்லை.இதே சாலையில், வைக்கப்பட்ட பேனர் தான், கடந்தாண்டு இளம்பெண் ஒருவரின் உயிரை பறித்தது. இதை உணர்ந்த சமூக ஆர்வலர்கள், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்தனர்.இதையடுத்து, பள்ளிக்கரணை போலீசார் பேனரை அகற்றினர். லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நிஜலிங்கம் மீது, பள்ளிக்கரணை போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.