குப்பை கையாள்வதில் மாநகராட்சி அலட்சியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2020
06:02

சென்னை - குப்பை கையாள்வதில், மாநகராட்சி அலட்சியம் காட்டி வருவதால், சென்னையில் மழைக்கால தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில், தினமும், 5,200 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. வீடு, வீடாக, 2019ல், மக்கும், மக்காத குப்பை தரம் பிரித்து பெற்றதுடன், உரம் தயாரிப்பிலும் மாநகராட்சி ஆர்வம் காட்டியது.தொற்று அபாயம்சமீப காலங்களில், உரம் தயாரிப்பில் துவங்கி, குப்பை கையாள்வதிலும், மாநகராட்சி அலட்சியம் காட்டி வருகிறது. குறிப்பாக, குப்பை தொட்டி இல்லாத மாநகராட்சியாக சென்னையை மாற்ற முயற்சித்து வருகிறது. எனவே, வீடுகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் சேகரிக்கப்படும் குப்பையை, துப்புரவு பணியாளர்கள் நேரடியாக பெற்று வருகின்றனர்.முதற்கட்டமாக, மணலி மண்டலத்தில் குப்பை தொட்டிகள் முழுதும் அகற்றப்பட்டு, துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக குப்பையை சேகரித்து வருகின்றனர்.அடுத்தபடியாக, அம்பத்துார் மண்டலத்திலும், குப்பை தொட்டி இல்லாத மண்டலமாக மாற்றும் வகையில், முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால், துப்புரவு பணியாளர்கள், வீடுகளில் குப்பை சேகரிக்க, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வருகின்றனர். இதனால், வீடுகளில் அதிகளவில் சேகரமாகும் குப்பையை, ஏற்கனவே குப்பை தொட்டி வைக்கப்பட்டிருந்த சாலையோரத்தில், பொதுமக்கள் கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரமற்ற நிலை உருவாகி உள்ளது. அப்பகுதிகளில் தெருநாய்கள் குப்பையை கிளறுவதால், மழைக்கால தொற்று நோய்கள் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குற்றச்சாட்டுஇதற்கிடையே, சென்னையில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய ஏழு மண்டலங்களில், குப்பை கையாள, உர்பர்சர் சுமித் நிறுவனத்திற்கு, மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. அந்நிறுவனம், அடையாறு, தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில், முதற்கட்டமாக குப்பை கையாளும் பணியை துவங்கியுள்ளது. இதற்காக அந்நிறுவனம், புதிய குப்பை தொட்டிகள், வாகனங்களை கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகிறது.மற்ற மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை, மாநகராட்சி செய்து வருகிறது.மாநகராட்சி நேரடியாக குப்பை கையாண்டு வரும் மண்டலங்களில், பழுதடைந்த வாகனங்கள், உடைந்த குப்பை தொட்டிகள் என, அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக, துப்புரவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, வீடு, வீடாக குப்பை சேகரிக்க, பயன்படுத்தப்பட்ட மூன்று சக்கர பேட்டரி வாகனம், பயன்பாட்டில் இல்லாத நிலை உள்ளது. கைகளால் இழுத்து வரப்பட்டு சேகரிக்கப்படும், சைக்கிள் ரிக் ஷா போன்றவைகளும் உரிய பராமரிப்பு இல்லாததால், வளைந்து, உடைந்து காணப்படுகிறது. இதுபோன்ற வாகனங்களை பயன்படுத்துவதால், துப்புரவு பணியாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து, துப்புரவு பணியாளர்கள் கூறியதாவது:மாநகராட்சியில் உள்ள குப்பை தொட்டிகள், வாகனங்கள் என, பெரும்பாலும் சேதமடைந்துள்ளன. அவற்றை சரி செய்யவும், புதிய வாகனங்களை வாங்கவும், மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக் காலங்களிலும், உடைந்த வாகனங்களில் குப்பை சேகரிப்பது, மிகவும் கடினமாக உள்ளது. எனவே, குப்பை தொட்டிகள், சேகரிக்கும் வண்டிகளை, மாநகராட்சி சீரமைத்து தர வேண்டும். மேலும், மழையில் குப்பை சேகரிக்கும் எங்களுக்கு, 'ரெயின்கோர்ட்'டை, மாநகராட்சி வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X