விஸ்வாசத்திற்கு பரிசாக துப்பாக்கி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2020
06:03

சென்னை - சென்னையில், மூவர் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளிகளுக்கு துப்பாக்கி கொடுத்து உதவிய, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார்.சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் தலித் சந்த், 74. இவரது மனைவி புஷ்பா பாய், 70, மகன் ஷீத்தல் குமார், 40, ஆகியோர், கடந்த, 11ம் தேதி, சுட்டுக் கொல்லப்பட்டனர்.விசாரணையில், மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் வசிக்கும், ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா, 34, உள்ளிட்ட, ஆறு பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதையடுத்து, புனே சென்ற போலீசார், ஜெயமாலாவின் சகோதரர், கைலாஷ், 33, உள்ளிட்ட, மூவரை, 13ம் தேதி கைது செய்தனர்.போலீசார் விசாரணைஅதன்பின், டில்லி அருகே, ஆக்ராவில், ஜெயமாலா, இவரது மற்றொரு சகோதரர் விலாஷ், 28, மற்றும் ராஜிவ் உத்தம் ஷிண்டே, 29, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.கொலையாளிகள் பயன்படுத்திய, கார் மற்றும் '32' ரக ரிவால்வர், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜிவ் துபே என்பவர் கொடுத்தது தெரியவந்தது.இதில், கார், ராஜிவ் துபே மனைவி மது துபே பெயரில் உள்ளது. இவர், ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி.இருவரையும், சென்னைக்கு அழைத்து வந்து, போலீசார் விசாரித்தனர். அப்போது, போலீசாரிடம் ராஜிவ் துபே கூறுகையில், 'நான் ஜெய்ப்பூரில், ஓட்டல் நடத்தி வருகிறேன். அங்கு அடிக்கடி கைலாஷ், விலாஷ் ஆகியோர் வந்து செல்வர். இவர்களுடன் நட்பு ஏற்பட்டது. இவர்களுக்கு, 2.50 லட்சம் ரூபாய்க்கு காரை விற்றேன். 'அப்போது, காரில் இருந்த துப்பாக்கியை எடுக்க மறந்து விட்டேன்' என, கூறினார்.வலது கரம்போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாவது:ராஜிவ் துபே, ராஜஸ்தான், மஹாராஷ்டிர மாநிலங்களில், 'ரியல் எஸ்டேட்' தொழில் செய்து வருகிறார். இவருக்கு, கைலாஷ், விலாஷ் ஆகியோர், வலது கரமாக செயல்பட்டுள்ளனர்.தொழில் போட்டி காரணமாக, தன் எதிரிகளை மிரட்ட, கைலாஷிடம் பல முறை ராஜிவ் துபே துப்பாக்கியை கொடுத்துள்ளார். விஸ்வாசத்திற்கு பரிசாக, கைலாஷுக்கு, மூவரையும் சுட்டுக் கொல்ல துப்பாக்கி மற்றும் காரை கொடுத்து உதவியுள்ளார்.இதையடுத்து, ராஜிவ் துபே நேற்று கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, புனே அருகே, அகமது நகரில், முட்புதரில், விலாஷ் வீசிய மற்றொரு நாட்டு துப்பாக்கியை, போலீசார் மீட்டனர்; இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.நேருக்கு நேர்!துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், முதலில் கைது செய்யப்பட்ட கைலாஷ் உள்ளிட்ட மூவரை, 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர். ஜெயமாலா, விலாஷ் உள்ளிட்ட மூவரையும், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை பாரிமுனையில் உள்ள, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இவர்களை, நேருக்கு நேர் விசாரித்து, போலீசார் வாக்குமூலம் பெற உள்ளனர். சம்பவ இடத்தில் நடிக்கச் சொல்லி, வீடியோவும் பதிவு செய்ய உள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X