ஆஸ்டின்பட்டி: தனக்கன்குளம் அருகே நின்றிருந்த வேன் மீது ஆம்னி பஸ் மோதி கண்மாயில் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து கடலை பருப்பு ஏற்றிச் சென்ற லாரி தனக்கன்குளம் நான்குவழிச்சாலை அருகே பழுதாகி நின்றது. அதன்மீது கோவையில் இருந்து திசையன்விளைக்கு சென்ற தனியார் பஸ் மோதி கண்மாய்க்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் உடுமலைப்பேட்டை ரெங்கம்மாள், சாத்தான்குளம் லிங்கம், கோவை சந்திரா, வளர்மதி, துாத்துக்குடி ஜெகன், இமானுவேல், திருப்பூரைச் சேர்ந்த பாண்டியராஜ் உள்பட 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.