மதுரை : மதுரை விளக்குத்துாண் சந்திப்பில் நேற்றுமுன் தினம் பைசல் அகமது ஜவுளி கோடவுனில் தீ விபத்து ஏற்பட்டது.3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். உயிர் சேதம் இல்லை.
இந்நிலையில் நேற்று காலை 10:00 மணிக்கு மீண்டும் கட்டடத்தில் புகை கிளம்பியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர். நகர் அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், ''கோப்புகள் பிளாஸ்டிக் கவர்களில் வைக்கப்பட்டிருந்தன. தீ கட்டுப்படுத்தப்பட்டாலும் பிளாஸ்டிக் கவர் என்பதால் 'மெல்ட்' ஆகி புகை கிளம்பியது'' என்றார்.