ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 2.56 லட்சம் பேருக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கியது முதல், ஈரோடு மாநகராட்சி பகுதியில், ஆறு இடங்களில் நிரந்தர பரிசோதனை மையம் அமைத்து, ஒவ்வொரு இடத்திலும் தினமும், 200 பேர் வரை பி.சி.ஆர்., சோதனை நடக்கிறது. பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் செய்கின்றனர். இதன்படி தினமும், 2,000 பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில், கொரோனா உறுதி செய்யப்படுவோருக்கு, 'ஸ்கிரீனிங் டெஸ்ட்' என, பிற உறுப்பு பாதிப்பு, கொரோனா பரவலின் அளவீட்டை அறிய, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி மண்டபத்தில் பரிசோதனை செய்கின்றனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவருக்கு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, இரண்டு லட்சத்து, 55 ஆயிரத்து, 830 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.