ஈரோடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு, தாலுகா அலுவலகம் முன், மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு, பறிக்கப்பட்ட சலுகைகள், அகவிலைப்படி, சரண்டர் போன்றவற்றை மீண்டும் வழங்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக, 5,068 பேருக்கு வழங்கப்பட்ட, 17-பி குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு, நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும், என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.