ஈரோடு: ஈரோடு மாவட்ட கொரோனா பாதிப்பு, நேற்று, 12 ஆயிரத்தை கடந்தது. நேற்று மட்டும், 72 பேர் தொற்றால் பாதித்தனர். இதனால் எண்ணிக்கை, 12 ஆயிரத்து ஒன்றாக உயர்ந்தது. இதுவரை, 11 ஆயிரத்து, 559 பேர் குணமடைந்த நிலையில், 303 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 139 பேர் இறந்துள்ளனர்.
* கோபியில் ஒரே நாளில், ஆறு பெண்கள் உட்பட, எட்டு பேர் தொற்றால் பாதித்தனர். கோபியை சேர்ந்த, 41 வயது பெண், சி.கே.கே., நகரை சேர்ந்த, 37 வயது பெண், மொடச்சூரில், 70 வயது ஆண், காளமேகம் வீதியில், 28 வயது ஆண், வேட்டைக்காரன் கோவிலில், 36 வயது பெண், கூகலூரில், 60, 50, 20 வயது பெண்கள் என எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் ஈரோடு மற்றும் பெருந்துறை சிறப்பு சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.