பவானி: பவானி ஆற்று பாலத்தில், மின் விளக்குகள் எரியாததால், இரவில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பவானியில் இருந்து ஈரோடு உள்ளிட்ட மற்ற ஊர்களுக்கு செல்ல, கூடுதுறை அருகே, பவானி ஆற்று பாலத்தை கடந்துதான், அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும். வெளியூரில் இருந்து பவானி நகருக்குள் வரும் வாகனங்களும், இந்த வழியாகத்தான் வரவேண்டும். பழமையான இந்த பாலத்தில், எந்நேரமும் போக்குவரத்து இருக்கும். பாலத்தில் மின் கம்பங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால், இரவில் கும்மிருட்டில் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். டூவீலர்கள், நடந்து செல்வோர் கவனமாக செல்லாவிட்டால், விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலத்தை தொடர்ந்து இருட்டாக்கி, வேடிக்கை பார்ப்பதை கைவிட்டு, விளக்குகளை எரிய வைத்து, மக்களின் தடுமாற்றத்தை போக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.